Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சபாவிற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை
தற்போதைய செய்திகள்

சபாவிற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-

வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சபாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இயற்கைச் சீற்றத்தினால் உயிர்ச் சேதம், பொருள் சேதம், அண்மைய நிலச்சரிவு பாதிப்புகள் முதலியவற்றினால் சபா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சபாவிற்குக் கூடுதலாக 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு உட்பட மத்திய அரசாங்கத்தின் அனைத்து கேந்திரங்களும் சபாவிற்கு உதவிட தங்கள் பலத்தை ஒருங்கிணைத்து, ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சபாவில் நிலச்சரிவு நிகழ்ந்த பெனம்பாங் மற்றும் கோத்தா கினபாலு ஆகியவற்றின் சில பகுதிகளை இன்று நேரடியாகக் களம் இறங்கி பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News