மலாக்கா, ஜனவரி.06-
மலாக்கா மாநில குடிநுழைவுத் துறையின் மூத்த அதிகாரி, அவரது மனைவி மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்
30 வயது மதிக்கத்தக்க அந்த மூத்த அதிகாரி, அவரது 30 வயது மனைவி மற்றும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இரண்டு அமலாக்க அதிகாரிகள் என மொத்தம் நான்கு பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நேற்று கைது செய்தது.
சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியமர்த்தும் வணிக வளாகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் முதலாளிகளிடமிருந்து மாதந்தோறும் லஞ்சம் பெற்றதாக நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நால்வரும் இன்று ஜனவரி 6 ஆம் தேதி மலாக்கா, ஆயர் குரோ நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி Sharda Shienha Mohd. Suleiman, இவர்களை ஜனவரி 11-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.








