Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சோகம்: 12-ஆவது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி; தாய் கைது
தற்போதைய செய்திகள்

சோகம்: 12-ஆவது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி; தாய் கைது

Share:

ஜோகூர், தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 10 வயது அண்ணன் படுகாயமடைந்து சுல்தானா அமீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக 37 வயதுடைய இந்தோனேசியத் தாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போதைப்பொருள் சோதனை செய்ததில் நெகடிவ் என வந்துள்ளது.

குழந்தைகளைக் கைவிடுதல் அல்லது கொடுமைப்படுத்துதல் தொடர்பான 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News