Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆறு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து
தற்போதைய செய்திகள்

ஆறு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து

Share:

பத்து பஹ்ட், அக்டோபர்.12-

இன்று அதிகாலை 2.30 மணியளவில், ஜோகூர், ஆயர் ஹீத்தாம் அருகே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஆறு வாகனங்கள் மோதிய கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சங்கிலித் தொடர் விபத்தில், 14 வயதான முகமட் அம்மார் ஸஃப்ரான் கைருல் நிஸாம் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று மோட்டார் சைக்கிள்கள், ஒரு பேருந்து, ஒரு வேன், ஒரு கார் மோதிய இந்த விபத்தில், முகமட் அம்மார் பலத்த காயம் அடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் 16 வயது நண்பர் கைகளிலும் கால்களிலும் காயங்களுடன் குளுவாங் Enche’ Besar Hajjah Khalsom மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து, வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதிலிருந்து தொடங்கியது. மோதிய வேகத்தில் இளைஞர்கள் சாலையில் வீசப்பட்டனர். அதே நேரத்தில் பின்னால் வந்த பேருந்து, வேன் மற்றும் கார் அவர்களை இடித்துத் தள்ளியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பத்து பஹாட் மாவட்டக் காவற்படையின் தலைவர், அசிஸ்டன் கமிஷனர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related News