Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சிறு படகின் மூலம் நாட்டிற்குள் நுழையும் கும்பல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜோகூர்பாரு, ஜன.16-


உயிர் இடரையும் பொருட்படுத்தாமல், சிறு படகின் மூலம் கடல் அலைகள் மீது பயணம் செய்து, நாட்டிற்குள் நுழையும் அந்நிய நாட்டவர்களின் தந்திர செயல் அம்பலமாகியிருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.

ஜோகூர், தஞ்சோங் குபாங்கை தளமாக கொண்டு, தரையிறங்கி வந்த அந்த கும்பலை, ஓப் தாரிங கெலோரா சோதனை நடவடிக்கையின் மூலம் கடந்த திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் முறியடிக்கப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

தஞ்சோங் குபாங், தஞ்சோங் அடாங் கடற்பகுதியை நோக்கி சிறுபடகில் வந்து கொண்டிருந்த அந்தக் கும்பலைச் சேர்ந்த 10 ஆண்களையும், 5 பெண்களையும் கடற்போலீசார் கைது செய்தனர்.

இவர்களை கொண்டு வருவதற்கு இந்தோனேசியாவை தளமாக கொண்டு, இரண்டு படகோட்டிகள், ஒவ்வொரிடமும் தலா ஆயிரம் வெள்ளியை கட்டணமாக வசூல் செய்து இருக்கின்றனர்.

கடற்போலீசாரின் கண்களை மறைப்பதற்கு மிக தந்திரமாக சிறு படகின் மூலம் பயணம் செய்து ஜோகூர் கடற்பகுதியில் தரையிறங்க அவர்கள் முயற்சி செய்து இருப்பதாக டத்தோ குமார் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →