குவாந்தான், செப்டம்பர்.20-
பகாங் மாநிலத்தில் பெல்டா நிலக்குடியேற்றப் பகுதிகள், போதைப்பித்தர்களின் உறைவிடமாக மாறி விடக்கூடாது என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று கேட்டுக் கொண்டார்.
பகாங் மாநிலத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 204 போதைப்பித்தர்கள் உள்ளதாக தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு வாரியம் புள்ளி விவரங்களை அளித்துள்ளது. இதில் ஆயிரத்து 317 பேர், பெல்டா குடியேற்றப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுல்தான் குறிப்பிட்டார்.
நிலப்பகுதிகளை மேம்படுத்துதற்காக குடியேற்றவாசிகள் பெல்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அப்பகுதிகள் தற்போது போதைப்பித்தர்களின் உறைவிடமாக மாறி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சுல்தான் தெரிவித்தார்.








