பாஸ் கட்சித் தலைவர் ஹடி அவாங் எச்சரிப்பு
மலேசியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம் அல்லாதவர்கள் வரம்பு மீறி செயல்படுவார்களேயானால், அவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்று பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் எச்சரித்துள்ளார்.
டிஏபி நிறுவப்பட்டதிலிருந்து, அது நாட்டிற்கு ஒரு தொல்லையாக இருப்பதாகவும், அக்கட்சி வரம்பு மீறி செயல்பட்டால், அக்கட்சி பெரும் அச்சுறுத்தல்களைச் சந்திக நேரிடும் என்று ஹடி அவாங் தெரிவித்துள்ளார்.
‘மலேசியன் மலேசியா’ என்ற கொள்கையின் மூலம் டிஏபி கட்சி மதம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இது நாட்டின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கச் செய்கிறது என்றும் ஹடி அவாங் குறிப்பிட்டார்.
மேலும் டிஏபி கட்சிக்குத் துணைபோகும் முஸ்லீம்கள் மற்றும் மலாய்க்காரர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹடி அவாங் சாடினார்.








