கோலாலம்பூர், ஆகஸ்ட்.06-
கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் துங்குவில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொள்ளைக் கும்பல் தலைவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சிலாங்கூர், கோலாலம்பூர், பேரா ஆகிய மூன்று மாநிலங்களில் வீடு புகுந்து திருடுதல், போதைப்பொருள் கடத்தல் முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலின் மூளையாக இருந்து செயல்பட்டவன் என்று நம்பப்படும் அந்த ஆடவருக்கு 44 குற்றப்பதிவுகள் இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை இடைக்கால இயக்குநர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகமும், கோலாலம்பூர் போலீஸ் துறையும் இணைந்து அதிகாலை 4.10 மணியளவில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அந்தக் கொள்ளைக் கும்பல் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








