ஜோகூர் பாரு, ஜனவரி.03-
காரின் பதிவு எண்ணை மறைத்த நிலையில் சிங்கப்பூர் வாகனம் ஒன்று மானிய அடிப்படையிலான ரோன்95 பெட்ரோலை நிரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஜோகூர் மாநில இலாகா விசாரணை செய்து வருவதாக அதன் இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் வாகனம், மலேசியாவின் மானிய விலையிலான பெட்ரோலை நிரப்பும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது காருக்கு ரோன் 95 மானிய விலையிலான எண்ணெய்யை அந்த சிங்கப்பூர் ஆடவர் நிரப்பிக் கொண்டு இருந்த போது அந்த காணொளி பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தக் கார் பதிவு எண்ணின் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் மறைக்கப்பட்டு இருந்தது என்பதை அந்த காணொளி சித்தரித்தது.








