Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் கேமரா
தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் கேமரா

Share:

பேரா மாநிலத்தில் இருக்கும் அனைத்து 15 ஊராட்சி மன்றங்களின் அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் பொறுத்தபடும் எனவும் அடுத்த ஆண்டு முதல் இது நடப்புக்கு வருவதாகவும் அம்மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் சாண்ட்ரா என்ஜி தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடர்பான கலந்தாலோசனை இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதாக கூறிய சாண்ட்ரா என்ஜி, மாநில அரசின் ஒதுக்கீட்டில் இருந்து அவை வாங்கப்படும் என தெரிவித்தார்.

வாங்கக் கூடிய நிலையில் சீருடையில் இணைக்கப்படும் கேமரா சந்தையில் கிடைக்கின்றன. எனவே, அதனை வாங்குவதில் நிதிப் பிரச்சனை இருக்காது என அவர் சொன்னார்.

அடுத்தாண்டு முதல் காலாண்டில் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related News