கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
அமெரிக்காவிடமிருந்து மேலும் 30 போயிங் ரக விமானங்களை மலேசியா வாங்கவிருக்கிறது. இவற்றின் மதிப்பு 9.5 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
மலேசியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா குறைப்பதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாகும் .
30 போயிங் 737 ரக விமானங்களை வாங்குவதற்கு மேக் (MAG) எனப்படும் மலேசியா ஏவியேஷன் குருப் குழுமம் முன் பதிவு செய்து இருக்கிறது என்று கடந்த மார்ச் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருந்தார்.
2030 ஆம் ஆண்டு வாக்கில் இந்த விமானங்கள் மலேசிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








