Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஸ்கூடாய் பள்ளிக்கு வெளியே மோதல்: 2 பெண்கள், 13 சிறுவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஸ்கூடாய் பள்ளிக்கு வெளியே மோதல்: 2 பெண்கள், 13 சிறுவர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-

ஜோகூர், ஸ்கூடாய், பண்டார் செலெசா ஜெயாவில் உள்ள பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளி முடிந்து ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டதில் தொடங்கிய இந்த மோதல் கலவரமாக மாறியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட போலீசார், 12 முதல் 37 வயதிற்குட்பட்ட 2 பெண்கள் மற்றும் 13 சிறுவர்களைக் கைது செய்தனர். கைதானவர்களை 3 முதல் 4 நாட்கள் காவலில் தடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை கலவரத்தில் ஈடுபடுதல் மற்றும் வேண்டுமென்றே காயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவியல் சட்டம் 147 மற்றும் 323 பிரிவுகளின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News