Sep 12, 2026
Thisaigal NewsYouTube
14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், தங்கக் கட்டிகளில் முறைகேடு / சொத்துகளை மறைத்ததாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், தங்கக் கட்டிகளில் முறைகேடு / சொத்துகளை மறைத்ததாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது குற்றச்சாட்டு

Share:

சொத்துகளை முறையாக அறிவிக்கத் தவறியதாக முன்னாள் பிரதமரும், பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சட்டத்தின் கீழ் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், பல்வேறு வெளிநாட்டு நாணயங்களாக இருந்த பல மில்லியன் மதிப்பிலான பணம் மற்றும் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட சொத்துகளை அறிவிக்கத் தவறியதாக அவர் மீதான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 வயதான இஸ்மாயில் சப்ரி , நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து விசாரணை கோரினார்.

மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டின்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, சட்டம் 694, பிரிவு 36(1)(a)-ன் கீழ், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் விதிமுறைகளுக்கு இணங்காத வகையில், திட்டமிட்டு எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், அந்த அறிக்கையில் அவர் வைத்திருந்த சொத்துகள் மற்றும் நிதி தொடர்பான முழுமையான விவரங்களை அறிவிக்கத் தவறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்படவிருந்த அவர், உடல்நலக் கோளாறு காரணமாக தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, விசாரணை இன்று ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி