Sep 15, 2026
Thisaigal NewsYouTube
பேரங்காடி முன் நிறுத்தப்பட்ட காரில் ஆண்-பெண் சடலமாக மீட்பு!
தற்போதைய செய்திகள்

பேரங்காடி முன் நிறுத்தப்பட்ட காரில் ஆண்-பெண் சடலமாக மீட்பு!

Share:

செமேன்யே விஸ்டா வேலி பகுதியில் உள்ள பேரங்காடி ஒன்றின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் 48 வயதுடைய ஆணும், 43 வயதுடைய பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டனர்.

நேற்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் யூசோப் கூறுகையில், இருவரும் காரின் முன்பக்க இருக்கைகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும், கடந்த சில நாட்களாக அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் இருந்ததுடன், அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் எழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இதுவரை எந்தவித குற்றச்செயலுக்கான ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என்றும் நஸ்ரோன் தெரிவித்துள்ளார்.

இருவரின் சடலங்களும் காஜாங் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கானது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News