கிளந்தானில் கடந்த சில நாட்களாக கெரிக்-ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை பகுதியில் சுற்றித் திரிந்த ‘'சுலோங்'’ என்ற ஆண் காட்டு யானை, தற்போது அம்மாநிலத்தின் வனப்பகுதிக்குள் திசை திருப்பி விடப்பட்டுள்ளது.
எனினும், அந்த யானையின் நடமாட்டம் மற்றும் உடல்நிலையை வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலித்தான் அதிகாரிகள், ட்ரோன்கள் மூலமாகவும், தரை வழியாகவும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், சுலோங் பாதுகாப்பான இடத்தில் இருக்கும் போது மட்டுமே அதனை மீட்பது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாகன ஓட்டிகள் யானையைப் பார்க்க வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், யானைக்கு உணவு வழங்கவோ சாலையோரத்தில் உணவு வைக்கவோ கூடாது என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








