ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.27-
பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் உள்ள ஃபிரிடம் ஹீல் மலைப்பகுதியின் அருகில் உள்ள ஹப்பி ரோக் காட்டுப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஓர் ஆணும் ஒரு பெண்ணும் நேற்று மாலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தம்பதியரான 44 வயது பெட்ரிக் பிலிப் சுங் மற்றும் 45 வயது பெர்ரிசியா வோங் ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
அந்த ஆஸ்திரேலிய தம்பதியர் நேற்று வெள்ளிக்கிழமை அந்த மலைப்பகுதியில் ஏறிய போது, வழி தவறிவிட்டனர் என்று அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோன் சகூன் குறிப்பிட்டார்.
மாலை 6.41 மணியளவில் அந்தத் தம்பதியர் கண்டுபிடிக்கப்பட்டு, மலையடி வாரத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டனர் என்று அவர் மேலும் விளக்கினார்.








