Sep 26, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் படகு விபத்து: 4 சடலங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

பங்கோர் படகு விபத்து: 4 சடலங்கள் மீட்கப்பட்டன

Share:

பங்கோர் தீவு அருகே 37 ஆவணமற்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் இரண்டாம் நாளான நேற்று நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட நான்கு பேரின் சடலங்களை கடலோரக் காவல்படை பிற்பகல் 2 மணியளவில் கண்டுபிடித்ததாக பேராக் மாநில மலேசிய கடல்சார் அமலாக்க முகமையான எம்எம்இஏ இயக்குநர் ஷுக்ரி கொத்தோப் தெரிவித்துள்ளார்.

செகாரி அருகே உள்ள புலாவ் தலாங் பகுதியில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் சடலங்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் மாயமான 10 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News