Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்

நவ. 28-

பினாங்கு, தஞ்சோங் பூங்காவில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் ஓரிட மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று அச்சம் தெரிவித்துள்ளது.

அந்த மேம்பாட்டுத்திட்டத்திற்காக இறக்கப்பட்டுள்ள ராட்சஷ கனரக இயந்திரங்கள், அருகில் உள்ள வீடமைப்புப்பகுதிக்கு செல்லும் சாக்கடை குழாய்களுக்கும், நீர் குழாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லதாக உள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

தவிர பல ஆண்டு காலமாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளித்து வரும் பழங்கால மரங்கள் வெட்டப்பட்டு வருவது உயிரியல் சூழலுக்கும், பருவ நிலை மாற்றத்திற்கும், மண் வடிவமைப்பு நிலைத்தன்மைக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முகைதீன் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →