கோலாலம்பூர், செப்டம்பர்.15-
சபா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மையான நட்மா மூலமாக 10 மில்லியன் ரிங்கிட் உடனடி நிதி உதவி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்துள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீடு உடனடி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
சபாவிற்கு மாநில அரசின் வாயிலாக 11 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிக் கரம் நீட்டுவதற்கு தற்போது 10 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இந்த உடனடி நிதி உதவி பெறுவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








