ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.23-
பினாங்கு, தெலுக் பாஹாங் கடற்கரைப் பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ராட்ஷச முதலை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் வளைத்துப் பிடிக்கப்பட்டது.
மூன்று மீட்டருக்கும் மேல் நீளம் கொண்ட அந்த ராட்ஷச முதலையைப் பிடிப்பதில் பொது தற்காப்பு படை, தீயணைப்பு, மீட்புப்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் சுமார் 20 பேர் உதவினர்.
மக்கள் அதிகமாக கூடும் அந்த கடற்பகுதியில் முதலை ஒன்று தோன்றியதாகக் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு அந்த கொடிய ஊர்வனம் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக மாவட்ட பொது தற்காப்பு அதிகாரி ஓய்வு பெற்ற கேப்டன் முகமட் ஐஸாட் அப்துல் கானி தெரிவித்தார்.








