Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சக்கரங்கள் பூட்டப்படும் நடவடிக்கை தொடங்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

சக்கரங்கள் பூட்டப்படும் நடவடிக்கை தொடங்கப்படுகிறது

Share:

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட இடங்களில் விருப்பம் போல் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் சக்கரங்கள் பூட்டப்படும் நடவடிக்கையை இம்மாதத்தில் மாநகர் மன்றம் தொடங்கவிருக்கிறது.

இத்தகைய குற்றங்களுக்கு கோம்பாவுன் நோட்டீஸ் வழங்கும் அணுகுமுறையை வாகனமோட்டிகள் பொருட்படுத்தாததைத் தொடர்ந்து வாகனங்கள் பூட்டப்படும் அணுகுமுறையை மாநகர் மன்றம் தொடங்கவிருப்பதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

உரிய இடத்தில் வாகனங்களை நிறுத்தாமல் விருப்பம் போல் வாகனங்களை நிறுத்தும் நடவடிக்கையினால் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக அதேவேளையில் வாகனமோட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக வாகனங்கள் சக்கரங்கள் பூட்டப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது மேலும் கூறியது.

Related News