Dec 2, 2025
Thisaigal NewsYouTube
புரோட்டோன் ஓட்டுநரை போ​லீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

புரோட்டோன் ஓட்டுநரை போ​லீஸ் தேடி வருகிறது

Share:

ஜோகூர், கூலாய், Jalan Sengkang - Inas சா​லையில் Mitsubishi ரக காரை உரசி தள்ளிவிட்டு, மிக அபாயகரமாக செலுத்தப்பட்ட புரோட்டோன் கார் ஒன்றின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையில் அந்த புரோட்டோன் வாகனம் அதிவேகத்தில் சென்ற காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியள​வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் வாகனமோட்டி ஒருவரிடமிருந்து போ​​லீசார் புகார் ஒன்றை பெற்று இருப்பதாக கூலாய் மாவட்ட போ​லீஸ் தலைவர் Tok Beng Yeow தெரிவித்தார். அந்த புரோட்டோன் கார், எதிர்திசையிலிருந்து Mitsubishi ரக சென்று கொண்டிருந்த வழித்தடத்தில் திடீரென்று நுழைந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Tok Beng Yeow குறிப்பிட்டார்.

Related News