Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்
தற்போதைய செய்திகள்

ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்

Share:

இந்து ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட சமய அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் மலேசிய இந்து சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

அவற்றில், ஆலய இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளும் அடங்கும் என அதன் தலைவர் டி. கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், சமய நடைமுறைகள் மற்றும் சட்டவிதிகளுக்கு ஏற்ப தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்து சங்கமானது, சுமார் 35 சமய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், குவாலா குபு பாருவில் உள்ள கோயில்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, குறிப்பிட்ட சில வழக்குகளைத் தீர்ப்பதற்கு மலேசிய இந்து சங்கம் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

மேலும், இந்து ஆலய விவகாரங்களில் சட்ட வழிமுறைகளை ஆய்வு செய்யவும், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் வழக்கறிஞர்கள் குழு ஒன்றையும் இந்து சங்கம் அமைத்துள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட ஆலயங்களிலிருந்து சிலைகள் இடமாற்றம் செய்யப்படும் போது, சமய நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் டி. கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு