Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் அக்மால் சாலெஹ்-வின் செயல்பாடுகளால், அரசாங்கத்திற்கு பெரும் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

டாக்டர் அக்மால் சாலெஹ்-வின் செயல்பாடுகளால், அரசாங்கத்திற்கு பெரும் பாதிப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச் 28-

அல்லா சொல் கொண்ட காலுறைகளை விற்பனை செய்த KK மார்ட் நிறுவன கடைகளை புறக்கணிக்குமாறு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் உட்பட அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ்-வின் அனைத்து செயல்பாடுகளும் நடப்பு ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கே பாதிப்பை உண்டாக்கும்.

அரசியல் விளம்பரத்துக்காக அப்போக்கை தொடர்ந்தால், பக்காத்தான் ஹரப்பான்-னுக்கு ஆதரவளித்துவரும் மலாய் அல்லாத சமூகத்தினரிடையே அது அதிருப்திகளை உண்டாக்கும் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அறிவியல் அரசியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் அஹ்மத் பவுஜி அப்துல் ஹமீத் கூறினார்.

அரசாங்கத்தின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமலிருக்க, டாக்டர் அக்மால் சாலெஹ்-விடம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடுமையான போக்கை கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

டாக்டர் அக்மால் சாலெஹ்-வின் செயல்பாடு ஒட்டுமொத்த அம்னோவையும் பிரதிபலிக்கவில்லை என கூறிய அனைத்துலக இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் அறிவியல் அரசியல் துறை கல்வியாளர் லாவ் ழே வெய், நடப்பு அரசாங்கம் வலுவாகவே இருக்குமென தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்