Oct 25, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு ஜாலான் துன் சார்டோன் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பினாங்கு ஜாலான் துன் சார்டோன் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.25-

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள பினாங்கு, பாலிக் பூலாவ், ஜாலான் துன் சர்டோன் சாலை, இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த பிரதான சாலை பிரிதொரு நாளில் அனைத்து போக்குவரத்துகளுக்கும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடை மழை காரணமாக அந்த சாலையில் இன்று மதியம் 12 மணி வரை மலைச்சாரலில் 6 இடங்களில் நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, அந்தச் சாலை தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

சாலையில் சரிந்து கிடக்கும் மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வரும் அதே வேளையில் நிலச்சரிவுக்கான காரணங்களும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News