Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மெர்டேக்கா மையம் கருத்துக்கணிப்பு: 52 விழுக்காடு ஆதரவுடன் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முதலிடம்
தற்போதைய செய்திகள்

மெர்டேக்கா மையம் கருத்துக்கணிப்பு: 52 விழுக்காடு ஆதரவுடன் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முதலிடம்

Share:

மெர்டேக்கா மையம் அண்மையில் நடத்திய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், 52 விழுக்காடு ஆதரவுடன் நாட்டின் அரசியல் தலைவர்களில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முதலிடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் 50 விழுக்காட்டுடன் கைரி ஜமாலுடின் இரண்டாம் இடத்திலும், 36 விழுக்காட்டுடன் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ரபிஸி ரம்லி 32 விழுக்காடும், அகமட் சம்சூரி 28 விழுக்காடும், அப்துல் ஹாடி அவாங் 25 விழுக்காடும் பெற்றுள்ள வேளையில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி 24 விழுக்காட்டுடன் மிகக் குறைந்த ஆதரவைப் பெற்றுள்ளார்.

பொருளாதார சவால்கள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுகளுக்கு மத்தியிலும், நாடு சரியான பாதையில்தான் செல்கிறது என்று 47 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கூட்டரசு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு 50 விழுக்காட்டினர் தங்களின் மனநிறைவை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related News