சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் மூத்த அமைச்சர் 66 வயது தர்மன் சண்முகரத்னம், அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 75 வயது ஙா கோக் சோங் மற்றும் என்.தி.யு.சி இன்காம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி 75 வயது டான் கின் லியான்ஆகியோர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரி டான் மெங் டுய் பிற்பகல் 12.39 மணிக்கு அம்மூவரையும் வேட்பாளர்களாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் முதல் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சிங்கப்பூருக்கு பொது விடுமுறையாகும்.
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா பிந்தி யாக்கோப் பின் 6 ஆண்டு கால பதவி காலம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தற்போது சிங்கப்பூரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


