பாங்கி, அக்டோபர்.02-
காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற மனிதாபிமான உதவிக்கான Global Sumud Flotilla கப்பல் பயணத்தில் இடம் பெற்ற 34 மலேசிய தொண்டுழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 1,500 ரிங்கிட் உதவி நிதி வழங்கப்படும் என்று சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகுவதைத் தணிப்பதற்கும் இந்த 1,500 ரிங்கிட் ரொக்க நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.








