கோலாலம்பூர், நவம்பர்.05-
சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ரொக்க உதவி பெறுநர்களில் 98 விழுக்காட்டினர் மைகாட்டைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இதுவரை 3.66 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டுள்ளனர் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
அதே வேளையில் பெர்லிஸ், சபா, கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சாரா ரொக்கப் பண உதவியை 100 விழுக்காடு முழுமையாகப் பயன்படுத்தி முடித்து விட்டனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.








