Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாதுகாவலருக்கு ஓராண்டு சிறை, அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகாவலருக்கு ஓராண்டு சிறை, அபராதம்

அலோர்ஸ்டார், நவ. 26-


கடந்த வாரம் தாம் பணியாற்றிய நிறுவனத்திற்கு சொந்தமான 2 லட்சம் ரிங்கிட் ரொக்கத்தை களவாடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பாதுகாவலர் நிறுவனம் ஒன்னின் பாதுகாவலருக்கு அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 4,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

38 வயது முகமட் பைருல் பிஸ்ரி அப்துல் ஹமிட் என்ற அந்த பாதுகாவலர், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையை விதிப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிடாயா முகமட் நூர் உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட பாதுகாவலர் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி காலை 10.34 மணியளவில் அலோர்ஸ்டார், தாமான் கிறிஸ்டல் சாலையின் சமிக்ஞை விளக்குப்பகுதியில் தாம் பணியாற்றும் வீராமாஸ் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான 2 லட்சம் வெள்ளி ரொக்கத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இவ்வழக்கில் முகமட் பைருலுடன் சேர்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் இரண்டு பாதுகாவலர்கள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →