நாட்டில் உள்ள தனியார் துறைகளில் நிகழ்ந்து வரும் லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கூறுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தனியார் துறையைச் சேர்ந்த 1,307 தனிநபர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டதாக அதன் கொள்கை, ஆய்வுப்பிரிவு இயக்குநர் நஸ்ரி தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 357 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அதேவேளையில் லஞ்ச ஊழல் தொடர்பில் 4,960 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகார்களின் அடிப்படையில் ஆணையம், 160 விசாரணை கோப்புகளை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று கோலாலம்பூரில் லஞ்ச ஊழலை வேரறுப்பது தொடர்பான ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.








