இந்தியாவின் வட மாநிலமான இமாச்சால பிரதேசத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளாமல் இருக்கும் 12 மலேசியர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
அந்த 12 மலேசியர்களுடன் தொடர்புகொள்ள அவர்களின் குடும்பத்தினர் முயற்சி செய்தும், அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் டில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக அந்த 12 மலேசியர்களை தேடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த 12 பேரும் இமாச்சால பிரதேசத்தில் ஹம்ப்தா பாஸ் என்ற ஊரில் சாகசப் பயணத்தில் பங்கு கொள்ள சென்றதாக கூறப்படுகிறது.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


