ஜோகூர்பாருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற வந்த ஆடவர் ஒருவர், அந்த மருத்துவமனை கட்டடத்தின் 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்தது. தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான 22 வயதுடைய அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
ஒரு மாற்றுத் திறனாளியான அந்த நபருக்கு, நாளை புதன்கிழமை காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது.மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அந்த ஆடவர் நேற்று காலை வந்த போது அவருக்கு காய்ச்சல் கண்டது. இதனால், அறுவை சிகிச்சை ஒத்திவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஆடவர் மருத்துவமனை கட்டடத்தின் 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார் என்று ஏசிபி ராவுப் செலாமாட் குறிப்பிட்டார்.








