தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜொங் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் சமிக்ஞை விளக்குப்பகுதியில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் மோதிவிபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம், நேற்று இரவு 11.36 மணியளவில் நிகழ்ந்ததாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.
இதில் தெலுக் இந்தானிலிருந்து கம்புங் செலாபாக் கை நோக்கி சென்று கொண்டிருந்த 25 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி காரினால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மரணமுற்ற வேளையில் அவரின் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றிக்கொண்டதாக ஏசிபி அஹ்மாட் அட்னான் பஸ்ரி குறிப்பிட்டார்.








