பகாங் மாநிலத்தின் கம்போங் சலாங், புலாவ் தியோமான் கடற்பகுதியில் முக்குளிப்பு விளையாட்டின் போது 31 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி, உயிரிழந்த பெண், ஒன்பது சக முக்குளிப்பாளர்களுடன், பயிற்றுவிப்பாளர் மற்றும் முக்குளிப்பு நிபுணர் ஒருவரின் வழிகாட்டுதலில் சீஃபேன், பத்து மலாங், புலாவ் துலாய் பகுதியில் நடைபெற்ற ஃபன் டைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
நீரில் இறங்குவதற்கு முன், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து அனைவருக்கும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷரிப் ஷாய் ஷரிப் மொண்டோய் கூறுகையில், உடற்கூறு பரிசோதனையில் ஆர்டீரியல் கேஸ் எம்போலிசம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் குற்றச்செயல் தொடர்பான எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








