May 5, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா ஏரியில் ஆடவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா ஏரியில் ஆடவர் சடலமாக மீட்பு

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.16-

புத்ராஜெயா, பிரசிண்ட் 8, இஸ்தானா டாருல் ஏஹ்சான் அருகே உள்ள ஏரிக்கரையில் இன்று திங்கள்கிழமை ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் புத்ராஜெயா செயல்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில், இது குறித்த அவசர அழைப்பு காலை 11:42 மணியளவில் 'மெர்ஸ் 999' வாயிலாகக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.

தகவல் கிடைத்தவுடன், பிரசிண்ட் 7, தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனம் மற்றும் ஒன்பது வீரர்கள் காலை 11:43 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வீரர்கள் அங்கு சென்றடைந்த போது, இஸ்தானா டாருல் ஏஹ்சான் அருகிலுள்ள ஏரியின் ஓரத்தில் ஓர் ஆணின் உடல் மிதந்து கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மலேசிய அரச போலீஸ் படையின் படகு உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் 'ஸ்ட்ரெச்சர்' பயன்படுத்தி அந்த உடலை கரைக்குக் கொண்டு வந்ததாக அந்த மையம் தெரிவித்தது.

Related News

புத்ராஜெயா ஏரியில் ஆடவர் சடலமாக மீட்பு | Thisaigal News