மது அல்லது போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதைக் கட்டாயமாக்கும் வகையில் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருப்பதாக 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, தெமர்லோவில் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் தம்பதியர், அவர்களின் சிறு குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, மது அல்லது போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதால் 28 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், வணிக வாகனங்களின் வேகம், இருப்பிடம், ஆபத்தான ஓட்டும் முறைகளைக் கண்காணிக்க தொலைத்தொடர்பு கண்காணிப்புக் கருவிகள் கட்டாயமாக்கப்படும். ஓட்டுநர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு மது அளவைக் கண்டறியும் கருவியுடனும் இவை இணைக்கப்படும்.








