Oct 1, 2026
Thisaigal NewsYouTube

சிரம்பானில் துப்பாக்கிச் சூடு: இரு ஆடவர்கள் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிரம்பானில் துப்பாக்கிச் சூடு: இரு ஆடவர்கள் படுகாயம்

சிரம்பான், டிசம்பர்.10-

சிரம்பான் போர்ட்டிக்சன் டோல் சாவடி அருகே இன்று புதன்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு ஆடவர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தின் போது, வெள்ளை நிற பெரோடுவா மைவி ரகக் காரை ஓட்டி வந்த இருவரில் ஒருவர், காரின் ஓட்டுநர் இருக்கையில் சரிந்து கிடப்பது போலான காணொளியானது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

அதே வேளையில், வாகனத்தின் வெளியேயும் முன்பக்கப் பயணிகள் இருக்கையிலும் இரத்தக் கறைகளும் இரத்தத் துளிகளும் காணப்பட்டன.

இந்நிலையில், அந்த இரு ஆடவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிரம்பான் மாநில போலீஸ் தலைவர் அஸஹார் ரஹிம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →