கோலாலம்பூர், செப்டம்பர்.11-
சுங்கை பூலோ கம்போங் ஶ்ரீ இண்டா ஏவில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அவ்வீட்டிலிருந்த 94 வயதான பழங்குடியினத்தைச் சேர்ந்த முதியவரும், அவரது 62 வயது மகனும் தீயில் கருகி பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், அதிகாலை 12.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், அடுத்த 10 நிமிடங்களில் தாங்கள் சம்பவ இடத்தை அடைந்த போது அவ்வீடு முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்வீட்டிலிருந்து கருகிய நிலையில் கிடந்த அம்முதியவர் மற்றும் அவரது மகனின் சடலங்களைத் தாங்கள் மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








