மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் நவம்பர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்து கேவ்ஸ், கம்போங் மலாயு விரா டாமாய் சமூக மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் ஜெலாஜா மடாணி நிகழ்வு நடைபெற உள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்க உள்ள இந்த நிகழ்வை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு ஆகியோர் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப், பெர்கெசோ, Talent Corp, NIOSH போன்ற நிறுவனங்கள் இதில் பங்கு பெறுகின்றன.
வேலை வாய்ப்பு கண்காட்சி, இலவச மருத்துவ பரிசோதனை, தொழில் திறன் பயிற்சிகள் குறித்த முகப்புகள் ஆகியன இந்த நிகழ்வில் இடம் பெற உள்ளன.
சுற்று வட்டார மக்கள் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.







