குவாந்தான், செப்டம்பர்.18-
குவாந்தானில் 42 வயதான ஆசிரியர் ஒருவரிடம் காப்பீட்டு முகவர், காவல்துறை அதிகாரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் போல் நாடகமாடிய பண மோசடிக் கும்பல் அவரிடமிருந்து 3 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் திருடியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இச்சம்பவத்தின் போது, மர்ம நபர் ஒருவர் அந்த ஆசிரியரின் தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, அவர் மீது பண மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக நாடகமாடியுள்ளார்.
மேலும், அவரை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க, பிணைத் தொகையும் கோரியுள்ளார்.
இந்நிலையில், அதனை நம்பிய அந்த ஆசியரியர், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையில், கிட்டத்தட்ட 13 முறை, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 117,000 ரிங்கிட்டுகளைப் பரிமாற்றம் செய்துள்ளார்.
அதே வேளையில், 280,000 ரிங்கிட்டிற்கு வங்கிக் கடனையும், நகைகளையும் அடகு வைக்கவும் பண மோசடிக் கும்பல் அவரை மிரட்டியுள்ளது.
இந்நிலையில் அந்த ஆசிரியர் காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.








