காஜாங், செப்டம்பர்.04-
கோலாலம்பூர், செராஸ், பத்து 9 வீடமைப்புப் பகுதியில் நாய் கடித்து 6 வயது சிறுவன் காயங்களுக்கு ஆளாகியுள்ளான். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணிக்கு நிகழ்ந்தது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.
ஒரு வீட்டின் முன் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அண்டை வீட்டுக்காரர்கள் துரிதமாக ஓடிச் சென்று நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
தலையில் பலத்த காயத்திற்கு ஆளான அந்தச் சிறுவன் காஜாங் மருத்துவமனையில் சிறார் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.








