நான்காம் கட்டம் ராஹ்மா உதவித் தொகை நவம்பர் 7 ஆம் தேதி முதல் 5.5 மில்லியன் பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இஃது இந்த ஆண்டுக்கான இறுதித் தொகையாகும் என நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த எண்ணிக்கையில் மொத்தம் 5.22 மில்லியன் எஸ்.தி.ஆர் பெறுநர்கள் ஆயிரத்து 200 வெள்ளி வரை உதவித் தொகையைப் பெறுவர். மேலும், , மேல்முறையீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட 280,000 புதிய பயனாளிகளும் இந்த முறை உதவித் தொகையைப் பெறுவார்கள்.
மேலும், யாரும் விடுபடு விடக் கூடாது என்பதற்காக அடுத்தாண்டு உதவித் தொகையைப் பெற தகுதி உள்ளவர்கள் மேல் முறையீடு, தகவல் புதுப்பிப்பு, புதிய விண்ணப்பம் ஆகியவற்றை ஆண்டு முழுவதும் மேற்கொள்ளலாம் எனவும் நிதியமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








