கடந்த மாதம் வர்த்தக தளம் ஒன்றின் நுழையாவில் வேலி கதவின் தடுப்பை வேண்டுமென்றே மோதித் தள்ளி சேதம் விளைவித்ததாக தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
27 வயது கே. விமல் என்ற அந்த பேருந்து ஓட்டுநர், மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் அஹ்மத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அந்த பேருந்து ஓட்டுநர் கடந்த ஜுலை 31 ஆம் தேதி காலை 11.15 மணியளவில் கிளானா ஜெயா, ஜெனித் கார்ப்பரேட் பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான தானியங்கி வேலி கதவின் தடுப்பை மோதி சேதப்படுத்தி சுமார் 5 ஆயிரம் வெள்ளி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிரான குற்றத்தை விமல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


