Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஈரான் மோதல்: நாடாளுமன்றச் சிறப்பு அமர்வைக் கூட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

ஈரான் மோதல்: நாடாளுமன்றச் சிறப்பு அமர்வைக் கூட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Share:

ஈரான் போர்ச் சூழலால் மலேசியாவிற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 11 உட்பிரிவு 3-இன் கீழ், இந்தச் சிறப்பு அமர்வைக் கூட்டக் கோரி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி மிற்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஹம்சா தெரிவித்தார்.

ஈரான் மோதலினால் நிலவும் போர்ச் சூழல், மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என ஹம்சா குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழலால் உலகளாவிய எரிசக்தி விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் மானியத்தை ஏப்ரல் 1 முதல் மாதம் 200 லிட்டராகக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்து இருப்பதையும் அவர் விளக்கினார்.

மக்களின் நலன் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, வெளிப்படையான முறையில் இந்த விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சித் தரப்பு விரும்புவதாக ஹம்சா சுட்டிக்காட்டினார்.

Related News