May 26, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப் சந்தாதாரர்களுக்கு லாப ஈவுத் தொகை 6 % இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

இபிஎப் சந்தாதாரர்களுக்கு லாப ஈவுத் தொகை 6 % இருக்கலாம்

Share:

கோலாலபூர், நவ. 13-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்., தனது சந்தாதாரர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகை, 6 விழுக்காடாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலண்டில் இபிஎப், செயல் திறன் வலுவாக இருப்பதால் சந்தாதாரர்களின் வைப்புத்தொகை நிதியிலிருந்து அதிக லாப ஈவை கொடுக்கும் நிலையில் தொழிலாளர் சேமநிதி வாரியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இபிஎப் சந்தாதாரர்களுக்கான லாப ஈவுத் தொகை வழக்கமான திட்டத்திற்கு சராசரி 5.95 விழுக்காடும் ஷரியா திட்டத்திற்கு 5.43 விழுக்காடும் வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில் 2024 இல், இபிஎப், இதுவரையில் வலுவான முதலீட்டு வருமானத்தைக்கொண்டு இருப்பதால் தனது சந்தாதாரர்களுக்கு லாப ஈவுத்தொகையாக சராசரி விகிதம் 6 விழுக்காடு வரை வழங்கும் அளவிற்கு சக்தியை கொண்டு இருப்பதாக பொருளியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

இந்த 6 விழுக்காடு லாப ஈவுத் தொகையை வழங்குவது என்பது சாத்தியமாகலாம் என்று சமூகவியல் பொருளாரா ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் லீ ஹெங் கை கூறுகிறார்.

காரணம் தமது நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் பபடி 2024 ஆம் ஆண்டில் லாப ஈவுத் தொகையாக 6.25 விழுக்காடு வரையில் வழங்கக்கூடிய ஆற்றலில் இபிஎப் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

இவ்வாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் இபிஎப். வலுவான முதலீட்டு வருவாயை கொண்டிருப்பதாக தனது வாதத்திற்கு அந்த பொருளாதார ஆய்வாளர் வலு சேர்க்கிறார்.

இவ்வாண்டின் மொத்த முதலீட்டு வருமானமானது, 2023 ஆம் ஆண்டில் 67 பில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Related News

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்