பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் முன்புறம் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 42 மற்றும் 32 வயதுடைய அந்த இரு நபர்களும் போதைப் பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக , பாடாங் பெசார் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமாட் ஷொக்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. பள்ளியின் வேலியோரத்தில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் அப்பகுதியை உலுக்கியது.








