Jul 2, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானுவில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் அரசாங்க ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

திரங்கானுவில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் அரசாங்க ஊழியர் கைது

Share:

கோலா பெராங், மே.17-

திரங்காணு மாநிலம், கோலா பெராங் பகுதியில் போலீசாரின் ரோந்துப் பணியின் போது, துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் அரசாங்க ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 10ஆம் தேதி, மாலை 6.20 மணியளவில், கம்போங் தோக் லாவிட் பகுதியில், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இச்சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது, Nissan Grand Livina இரகக் காரைச் செலுத்தி வந்த 40 வயதுடைய நபரைச் சோதனை செய்த அதிகாரிகள், அவரிடம் ஆயுதம் இருந்ததைக் கண்டறிந்ததாக உலு திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

அவரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு kerambit கத்திகள், ஒரு ஜோடி கைவிலங்கு மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரிடம் ஆயுதங்கள் எப்படி வந்தது என்பது குறித்தும், அதை வைத்திருந்ததற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு