Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை அலுவலகம் தவறு இழைத்து விட்டது
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை அலுவலகம் தவறு இழைத்து விட்டது

Share:

ஜன.4-

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் சட்டத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு நிகழ்ந்ததைத் தொடர்ந்து அதனை சரிப்படுத்துவதற்காகவே இஸ்தானா நெகாரா ஓர் அறிக்கை யை வெளியிட்டுள்ளது என்று வழக்கறிஞரும், சட்ட வல்லுநருமான முகமட் ஹனிப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பு என்பது கைதிகளுக்கு வழங்குவதற்கு மாமன்னருக்கே உரிய பிரித்தியேக உரிமையாகும். அதனைதான் அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.

ஒரு கைதி பொது மன்னிப்பு கோரினால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் யாவை என்பதை இஸ்தானா நெகாரா மிகத் தெளிவாக தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

ஆனால், சட்டத்துறை அலுவலகம் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் பெயரை பயன்படுத்தியது மூலம் மிகப்பெரிய தவற்றை இழைத்து விட்டது என்று ஹனிப் கத்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.

பொது மன்னிப்பு விவகாரத்தில் நஜீப் பெயரை சட்டத் துறை அலுவலகம் அறவே சம்பந்தப்படுத்தியிருக்கக்கூடாது. ஒரு கைதி, பொது மன்னிப்புக்கோரியானால் அடுத்து அவர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைதான் சட்டத்துறை அலுவலகம் விவரித்து இருக்க வேண்டுமே தவிர நஜீப் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியிருக்கக்கூடாது என்று அந்த அந்த சட்ட வல்லநர் விளக்கியுள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’