Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வயோதிகர் 21 மாடியிலிருந்து விழுந்து மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வயோதிகர் 21 மாடியிலிருந்து விழுந்து மரணம்

நவ. 27-

வயோதிகர் ஒருவர், பினாங்கு, தஞ்சோங் பூங்காவில் உள்ள ஒரு ஹோட்டலின் 21 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்டதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த முதியவர், வாழ்க்கை வெறுமையில் முடிந்த நிலையில் இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தாம் ஆளாகியிருப்பதாக கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை அந்த ஹோட்டலில் விட்டுச் சென்றுள்ளதாக அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அந்த முதியவர் பத்து பெரிங்கியில் உள்ள ஒரு ஹோட்டலிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலை அப்துல் ரசாக் மறுத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →